இந்தியா

சந்திரபாபு நாயுடு கட்டிய கூட்ட அரங்கை இடிக்க உத்தரவிட்ட ஜெகன்மோகன் ரெட்டி 

IANS

அமராவதி: தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கட்டிய கூட்ட அரங்கை இடிக்க மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். 

ஆந்திர முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக்கு காலத்தில் அவரது அதிகாரப்பூர்வ இல்லம் உண்டவல்லி என்னும் இடத்தில அமைந்திருந்தது. அதன் அருகிலேயே அதன் தொடர்ச்சியாக ஒரு மாபெரும் கூட்ட அரங்கை சந்திரபாபு நாயுடு காட்டினார். அதற்கு 'பிரஜா வேதிகா' என்று பெயரிடப்பட்டது. அங்கு அரசு தொடர்பான கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில் சந்திரபாபு நாயுடு கட்டிய 'பிரஜா வேதிகா' கூட்ட அரங்கை இடிக்க மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திங்களன்று உத்தரவிட்டுள்ளார். 

ஆந்திரா மாநிலத்தில் உள்ள  மாவட்ட ஆட்சித் தலைவர்களின் மாநாடு அதே கூட்ட அரங்கில் திங்களன்று நடைபெற்றது. அந்த மாநாட்டிலேயே ஜெகன்மோகன் ரெட்டி இந்த முடிவை அறிவித்தார்.

'பிரஜா வேதிகா' கட்டடமானது சட்ட விதிகளை மீறி கட்டப்பட்டு உள்ளதாகத் தெரிவித்த ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திராவில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிரான தனது நடவடிக்கை இந்த 'பிரஜா வேதிகா' கூட்ட அரங்கில் இருந்து தொடங்குவதாக அறிவித்தார்.   

அவரது இந்த நடவடிக்கையானது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தெலுங்கு தேசம் கட்சி விமரிசித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு விடுமுறையைக் கொண்டாட தற்போது குடும்பத்துடன் வெளிநாட்டில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT