ஜாம்ஷெட்புர்: ஜார்க்கண்ட் மாநிலம் சரைக்கேலா குர்சவானந்த் பகுதியில் 22 வயது முஸ்லிம் இளைஞரை ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான் சொல்லச் சொல்லி அடித்துக் கொன்றது ஒரு கும்பல்.
அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞர் தப்ரேஜ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சாதர் மருத்துவமனையில் நேற்று காலை அனுமதிக்கப்பட்ட தப்ரேஜ், ஜாம்ஷெட்புரில் உள்ள டாடா முக்கிய மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது.
சம்பவம் குறித்து புகார் கூறியிருக்கும் தப்ரேஜின் குடும்பத்தினர், இது முற்றிலும் மத ரீதியிலான துன்புறுத்தல் என்று கூறியுள்ளனர்.
தப்ரேஜை, உள்ளூர் மக்கள் சிலர் அடித்து உதைத்து திருடன் என்று சொல்லி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அவனை திருடன் என்று சந்தேகித்துள்ளனர். ஆனால் இது முற்றிலும் மத ரீதியிலான வன்முறை. அவனது பெயர் முஸ்லிம் பெயராக இருந்ததால் மட்டுமே அவன் அடித்துத் துன்புறுத்தப்பட்டுள்ளான். அடித்துத் துன்புறுத்திய கும்பல், தப்ரேஜை ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான் என்று கோஷம் எழுப்புமாறு வலியுறுத்தியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தப்ரேஜை சந்திக்க குடும்பத்தினர் யாரையும் அனுமதிக்கவில்லை. சம்பவம் நடந்தது தொடர்பான விடியோ எங்களிடம் உள்ளது. குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் என்கிறார் உறவினர் ஒருவர்.
இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் காவல்துறை, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.