இந்தியா

நாடாளுமன்ற வளாகத்தில் திரிணமூல் எம்.பி.க்கள் தர்னா: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முறைக்கு எதிர்ப்பு

DIN


மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைக்குப் பதிலாக, நாடு முழுவதும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதற்கு திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்திருந்தது. மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என்றும் அக்கட்சியினர் சந்தேகம் எழுப்பினர். 
இந்நிலையில், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திங்கள்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் அமர்ந்து இயந்திர வாக்குப்பதிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தர்னாவில் ஈடுபட்டனர். அப்போது தேர்தலில் வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டும். மின்னனு வாக்குப் பதிவு முறையை மேற்கொள்ள கூடாது என்று அவர்கள் கோஷமிட்டனர். 
தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், தேர்தலில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்றும் அவர் கேட்டிருந்தார். 
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக விரிவாக ஆராய உண்மை கண்டறியும் குழுவை அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT