இந்தியா

மேகதாது அணை: கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

DIN


சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் பழனிசாமி எழுதியிருக்கும் கடிதத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளது. ஆனால், காவிரியில் மேகதாது அணை கட்டும் முடிவானது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. 

எனவே, கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட மத்திய அரசு, சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கக் கூடாது என்றும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நேரடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், தமிழக அரசின் கருத்தைக் கேட்காமல் மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி தரக் கூடாது என்றும், தமிழகம் உட்பட காவிரி ஆறு பாயும் மாநிலங்களின் கருத்துகளை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்றும் முதல்வர் பழனிசாமி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT