இந்தியா

காலையில் ஒன்பது மணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருக்க வேண்டும்: பிரம்பெடுக்கும் யோகி ஆதித்யநாத் 

DIN

லக்னௌ: உத்தரபிரதேசத்தில் காலையில் ஒன்பது மணிக்கெல்லாம் அரசு அதிகாரிகள் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து அரசு அலுவலகங்களுக்கும்  அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் காலை 9 மணிக்கு சரியாக அலுவலகம் வரவேண்டும். அவ்வாறு சரியாக வரவில்லை என்றால் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும்.

அதேபோல மாவட்ட நீதிபதி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் காலை 9 மணியிலிருந்து 11 மணி வரையில் தங்கள் அலுவலகத்தில் பொதுமக்களைச் சந்திக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு போடும் அதே சமயம் மாலை எப்போது நாங்கள் வீட்டுக்கு செல்லலாம் என்பதையும் அரசு அறிவிக்க வேண்டும் என அவர்கள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT