இந்தியா

மோடி பேச்சுவார்த்தை எதிரொலி: கூடுதலாக 30 ஆயிரம் ஹஜ் பயணிகளுக்கு அனுமதி 

சவுதி அரேபிய இளவரசருடன் இந்திய பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தையின் எதிரொலியாக, இந்தியாவிலிருந்து கூடுதலாக 30 ஆயிரம் ஹஜ் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.

DIN

புது தில்லி: சவுதி அரேபிய இளவரசருடன் இந்திய பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தையின் எதிரொலியாக, இந்தியாவிலிருந்து கூடுதலாக 30 ஆயிரம் ஹஜ் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.

ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெறும்  ஜி20 மாநாட்டிற்காக சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருநாடுகளிடையே முதலீடு, எரிசக்தி பாதுகாப்பு, பயங்கரவாதத்தை ஒழித்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேச்சு நடத்தினர்.

இந்நிலையில் சவுதி அரேபிய இளவரசருடன் இந்திய பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்தையின் எதிரொலியாக, இந்தியாவிலிருந்து கூடுதலாக 30 ஆயிரம் ஹஜ் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.

இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் விஜய் கோகலே செய்தியாளர்களிடம் கூறும்போது, ' பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று இந்தியாவில் இருந்து கூடுதலாக 30 ஆயிரம் இஸ்லாமியர்கள் மெக்காவுக்கு புனிதப் பயணம் வருவதற்கு அனுமதி அளிப்பதாக சவுதி அரேபிய அரசு உறுதியளித்துள்ளது' என்று தெரிவித்தார்.

இதற்கு முன்பாக இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு 1.70 ஆயிரம் இஸ்லாமியர்கள் மெக்காவுக்கு புனித ஹஜ் பயணம் செல்கின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT