இந்தியா

மக்களவைத் தேர்தல் தேதிகளை தாமதப்படுத்துவது ஏன்? அகமது படேல் கேள்வி

DIN


மக்களவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் ஏன் தாமதப்படுத்துகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அகமது படேல் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக, அவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, 

"பொதுத் தேர்தல் தேதிகளை அறிவிப்பதற்கு முன்பாக பிரதமர் மோடி தனது அரசு முறை பயண நிகழ்வுகள் அனைத்தையும் நிறைவு செய்யட்டும் என்று தேர்தல் ஆணையம் காத்துக்கொண்டிருக்கிறதா. அரசு நிகழ்ச்சிகளை பயன்படுத்தி அரசியல் கூட்டங்கள், தொலைக்காட்சி/ரேடியோ மற்றும் நாளிதழ்கள் என விளம்பரங்களாக வெளியிடுகின்றனர். 

அரசு பணத்தில் கடைசி கட்டம் வரை பிரசாரம் செய்யட்டும் என தேர்தல் ஆணையம் அரசுக்கு நேரம் தருவது போல் உள்ளது" என்றார். 

2014 மக்களவைத் தேர்தல் தேதிகள் மார்ச் 5-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. பிறகு 2017-இல் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தாமதமாக அறிவித்ததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

SCROLL FOR NEXT