இந்தியா

இந்தியா மீது அணுஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தயங்காது: பஞ்சாப் முதல்வர் எச்சரிக்கை

DIN

போர் ஏற்படும் சூழ்நிலை வந்தால் இந்தியா மீது அணுஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தயங்காது என்று பஞ்சாப் முதல்வர் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மேலும் கூறியதாவது:

இந்தியாவும், பாகிஸ்தானும் அணுஆயுதங்கள் கொண்டுள்ள நாடுகள். ஒருவேளை இவ்விரு நாடுகளுக்கு இடையில் போர் ஏற்பட்டால், யாருக்கும் பெரிய விருப்பம் இல்லை என்றாலும், போரில் தோல்வியை தழுவும் நிலையில் அணுஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஒருபோதும் தயங்காது.

இந்திய விமானப்படைத் தாக்குதலில் ஒருவர் அல்லது 100 பேர் என்றில்லை. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா கடும் நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்கத்தான். பாகிஸ்தானில் மிகப்பெரிய பஞ்சம் உள்ளது. அந்நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தில் சரிந்துள்ளது. எனவே அவர்களால் இந்தியாவுடன் போரிட முடியாது. இருப்பினும் அது அணுஆயுதங்களை பயன்படுத்த தயங்காது என்று மீண்டும் ஒருமுறை எச்சரித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT