இந்தியா

பாதுகாப்புப் படை தாக்குதல் விவரங்களை அமித் ஷா வெளியிடுவதா?: ஏ.கே.அந்தோணி கண்டனம்

பாதுகாப்புப் படைகளை அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏ.கே.அந்தோணி தெரிவித்தார்.

DIN

பாதுகாப்புப் படைகளை அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏ.கே.அந்தோணி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதல் குறித்த விவரங்களை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவோ அல்லது பாஜக செய்தித்தொடர்பாளர்களோ விளக்கக் கூடாது. அது மிக மிக துரதிருஷ்டவசமானதாகும். வீரர்கள் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தால், அதுதொடர்பான விவரங்களை பாதுகாப்புப் படைகளே விளக்க வேண்டும். அரசியலுக்காக பாதுகாப்புப் படைகளை  பயன்படுத்திக் கொள்ள வேண்டாம். இதை பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோரிடம் கேட்டுக் கொள்கிறேன்.
பாதுகாப்புத் துறை அமைச்சராக நான் பதவி வகித்த காலத்தில் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தேன். அந்தக் குழுவின் பரிந்துரைகளை ஏற்காமல் பிரான்ஸýடன் பிரதமர் மோடி கையெழுத்திட்டுள்ளார்.
இதன்மூலம், தேச நலனை அவர் விட்டுக் கொடுத்துவிட்டார் என்று அந்தோணி 
தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு கஷ்டம் தீரும்: தினப்பலன்கள்!

டிச.27-இல் காஞ்சியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

போளூரில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

மகாராஷ்டிரம்: பாஜகவில் இணைந்தாா் காங்கிரஸ் பெண் எம்எல்சி

SCROLL FOR NEXT