இந்தியா

தில்லியில் மஜத தலைவர் எச்.டி.தேவெகெளடாவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு

DIN

கர்நாடகாவில் இடங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக காங்கிரஸ்-மஜத இடையே பேச்சுவார்த்தை தில்லியில் நடைபெற்று வருகிறது. 

கர்நாடகாவில் ஏற்கெனவே மதசார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இக்கூட்டணியே நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலிலும் தொடர உள்ளது. 

இந்நிலையில் தில்லியில் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெகெளடாவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். மக்களவைத் தேர்தலில் இடங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக இருகட்சித் தலைவர்களும் இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.  

கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளை மஜத கேட்பதாகவும் ஆனால் 8 தொகுதிகள் மட்டுமே கொடுக்க காங்கிரஸ் விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT