இந்தியா

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் பொது பாதுகாப்புச் சட்டத்தில் கைது 

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரான யாசின் மாலிக் பொது பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ANI

ஸ்ரீநகர்: காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரான யாசின் மாலிக் பொது பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

புல்வாமா தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து யாசின் மாலிக் உள்ளிட்ட காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பினை மத்திய அரசு விலக்கிக் கொண்டது.

அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 2-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டு கோதிபாஹ் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டார். அத்துடன் 26-ஆம் தேதி அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் தேசிய விசாரனை ஆணையம் சோதனைகளை நடத்தியது.

இந்நிலையில் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரான யாசின் மாலிக் பொது பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக யாசின் மாலிக்கின் கட்சியான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

யாசின் மாலிக் அவர்கள் கடுமையான சட்டப்பிரிவான பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஒரு தன்னிச்சையான கைது நடவடிக்கையாகும். 

அவர் தற்போது ஜம்முவில் உள்ள கோட் பல்வால் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT