இந்தியா

2வது விமானத்தை வீழ்த்தியதாகக் கூறும் பாகிஸ்தானே.. ஆதாரம் எங்கே? கேட்கிறது இந்தியா!

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான 2வது விமானத்தை வீழ்த்தியதாகக் கூறும் பாகிஸ்தான் அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை வலியுறுத்தியுள்ளது.

ANI


புது தில்லி: இந்திய விமானப் படைக்குச் சொந்தமான 2வது விமானத்தை வீழ்த்தியதாகக் கூறும் பாகிஸ்தான் அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை வலியுறுத்தியுள்ளது.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், புதிய பாகிஸ்தான் உருவாகிவிட்டதாகக் கூறும் இம்ரான் கான் பயங்கரவாதிகள் மீது புதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புல்வாமா தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பை பாகிஸ்தான் பாதுகாக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் பேசுகையில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான 2வது விமானத்தை வீழ்த்திவிட்டதாகக் கூறும் பாகிஸ்தான், விமானத்தை வீழ்த்தியதற்கான ஆதாரத்தை சர்வதேச ஊடகங்களில் ஏன் வெளியிடவில்லை? 2வது விமானத்தை வீழ்த்தியது உண்மை என்றால் ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT