இந்தியா

குடியரசுத் தலைவர் மாளிகையில் கோலாகலமாக நடந்த பத்ம விருதுகள் வழங்கும் விழா

புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று கோலாகலமாக நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் குடியசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

ANI


புது தில்லி: புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று கோலாகலமாக நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

கடந்த ஆண்டு பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளுக்கு 102 பேர்  தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.
 

விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமலுக்கு குடியரசுத் தலைவர் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தார்.

மேலும், ஆன்மிகவாதியான பங்காரு அடிகளார் மற்றும் திரைப்பட நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவும் பத்ம ஸ்ரீ விருதினைப் பெற்றுக் கொண்டனர்.

பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட அனைவரும் இன்று குடியரசுத் தலைவர் கையால் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிர் உலகக்கோப்பை: வங்கதேசம் போராடி தோல்வி!

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் ஸ்மிருதி மந்தனா!

ஃபேப்டெக் டெக்னாலஜி பங்குகள் 4.55% சரிவுடன் நிறைவு!

ராதையின் மோகனம்... அனுபமா!

ஹெச்.டி. தேவெகெளடா மருத்துவமனையில் அனுமதி

SCROLL FOR NEXT