இந்தியா

ரயில்வே முன்பதிவில் "யுடிஐடி'யை கட்டாயமாக்கக் கோரிய வழக்கு: மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம்  நோட்டீஸ்

தினமணி

மாற்றுத் திறனாளிகள் சலுகை அடிப்படையிலான ரயில் டிக்கெட்டை பதிவு செய்ய அவர்களுக்கான "தனித்துவ அடையாள அட்டையை' (யுடிஐடி) பயன்படுத்துவதை அங்கீகரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சலுகை அடிப்படையில் ரயில் டிக்கெட் பதிவு செய்ய, ரயில்வே வழங்கிய தனி அட்டையை பயன்படுத்துவதா அல்லது அரசு வழங்கிய யுடிஐடியை பயன்படுத்துவதா என்ற குழப்பம் மாற்றுத் திறனாளிகளிடையே நிலவி வருகிறது. இந்நிலையில், சலுகை டிக்கெட் பெற அரசு வழங்கும் யுடிஐடியையே பயன்படுத்த அனுமதி அளிக்கக் கோரி "மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்கான தேசிய மேடை' என்ற அமைப்பு சார்பில் உயர்நீதிமன்றத்தில் கடந்த 9-ஆம் தேதி பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில், இந்த மனு தில்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி ஜெய்ராம் பம்பனி ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான தேசிய மேடை (என்பிஆர்டி) சார்பில் வழக்குரைஞர்கள் சுரேந்திரநாத், சுபாஷ் சந்திரன் ஆகியோர் ஆஜராகி, மனுவில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகளை விவரித்தனர். 

இதைத் தொடர்ந்து, இந்த மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய சமூக நலத் துறை அமைச்சகம், ரயில்வேத் துறை ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணை ஜூலை 26-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT