இந்தியா

முதல்முறை வாக்காளர்கள்: மேற்கு வங்கத்தில் அதிகம்

வரும் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில்தான் அதிகபட்சமாக 20.1 லட்சம் இளைய தலைமுறையினர் முதல்முறையாக வாக்களிக்க இருக்கின்றனர்.

DIN


வரும் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில்தான் அதிகபட்சமாக 20.1 லட்சம் இளைய தலைமுறையினர் முதல்முறையாக வாக்களிக்க இருக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக உத்தரப் பிரதேசத்தில் 16.7 லட்சம் பேரும், மத்தியப் பிரதேசத்தில் 13.6 லட்சம் பேரும் முதல்முறையாக தேர்தலில் வாக்களிக்க இருக்கின்றனர்.
கடந்த 2014-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, அடுத்த மாதம் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 8.4 கோடி பேர் புதிதாக வாக்களிக்க இருக்கின்றனர். இவர்களில் 18 முதல் 19 வயதுக்குள்பட்டவர்கள் மட்டும் 1.5 கோடி பேர் ஆவர்.
ராஜஸ்தான், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு முதல்முறை வாக்காளர்கள் உள்ளனர். ராஜஸ்தானில் 12.8 லட்சம் பேரும், மகாராஷ்டிரத்தில் 11.9 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் 8.9 லட்சம் பேரும், ஆந்திரத்தில்  5.3 லட்சம் பேரும் முதல்முறையாக வாக்களிக்க இருக்கின்றனர். தலைநகர் தில்லியில் 97 ஆயிரத்து 684 புதிய வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT