இந்தியா

உ.பி. யில் காங்கிரஸ் சுதந்திரமாக போட்டியிடலாம்: மாயாவதி, அகிலேஷ் அறிவிப்பு

DIN


உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி- பகுஜன் சமாஜ் கூட்டணி போட்டியிட தொகுதிகளை ஒதுக்கி, குழப்பத்தை உண்டாக்காமல், மொத்தம் உள்ள 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் சுதந்திரமாக போட்டியிடலாம் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும், சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவும் தெரிவித்துள்ளனர்.
அந்த மாநிலத்தில் காங்கிரஸ் சொந்த பலத்துடன் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில்,  சமாஜவாதி- பகுஜன்சமாஜ் கூட்டணியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் போட்டியிடவுள்ள 7 மக்களவைத் தொகுதிகளில்  வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்று காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
அதற்கு பதிலளித்து மாயாவதி சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி சுதந்திரமாக போட்டியிடலாம். பாஜகவைத் தோற்கடிப்பதற்கு சமாஜவாதி- பகுஜன் சமாஜ்- ராஷ்ட்ரீய லோக் தளம் கூட்டணியே போதுமானது. அதனால் குழப்பத்தை உண்டாக்காமல், அனைத்து தொகுதிகளிலும்  வேட்பாளர்களை காங்கிரஸ் நிறுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, காங்கிரஸுடன் எவ்வித கூட்டணியும் இல்லை என்று மாயாவதி உறுதியாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
இதே போல, அகிலேஷ் யாதவ் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், பாஜகவை தோற்கடிக்க, எங்கள் கூட்டணியே போதுமானது. எவ்வித குழப்பத்தையும் காங்கிரஸ் கட்சி உருவாக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT