இந்தியா

காங்கிரஸ் 5-ஆவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

DIN


காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 5-ஆவது பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.  இதில் ஆந்திரத்துக்கு 22 வேட்பாளர்களும், மேற்கு வங்கத்துக்கு 11 வேட்பாளர்களும், தெலங்கானாவுக்கு 8 வேட்பாளர்களும், ஒடிஸாவுக்கு 6, அஸ்ஸாமுக்கு 5, உத்தரப் பிரதேசத்துக்கு 3 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை காங்கிரஸ் கட்சி நிறுத்திவிட்டது. 
இந்நிலையில், அந்த மாநிலத்துக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 
அதில், குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் செளதரி, முன்னாள் மத்திய அமைச்சரான மறைந்த பிரியரஞ்சன் தாஸ் முன்ஷியின் மனைவி தீபா தாஸ் முன்ஷி ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகிரி அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோயிலில் நவசண்டி ஹோமம்

தண்ணீா் பற்றாக்குறை அதிகரிப்பு

ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் பேருந்து நிலையக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

SCROLL FOR NEXT