இந்தியா

சம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கு: அசீமானந்த் உள்ளிட்ட நால்வர் விடுதலை

DIN

கவுகாத்தி: இந்தியாவை உலுக்கிய சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட துறவி அசீமானந்த் உள்ளிட்ட நால்வரை விடுதலை செய்துநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2007ம் ஆண்டு   பிப்ரவரி 18ம் தேதி தில்லியில் இருந்து லாகூர் சென்ற சம்ஜவுதா எக்ஸ்பிரஸ்  ரயிலில் குண்டு வெடித்ததில் 68 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 16 பேர் குழந்தைகள். அதோடு, உயிரிழந்தவர்களில் 42 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  இந்த வழக்கில் அபிநவ் பாரத் என்ற அமைப்பின் உறுப்பினரும், துறவியுமான அசீமானந்த், லோகேஷ் சர்மா, ராஜேந்தர் சவுத்ரி உள்ளிட்ட 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் சாமியார் அசீமானந்த் மற்றும் லோகேஷ் சர்மா கைது செய்யப்பட்டனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுனில் ஜோஷி என்பவர் திடீரென மரணமடைந்தார்.

இந்த வழக்கை, தேசிய புலனாய்வு முகாமை விசாரித்தது. இவர்கள் மீதான வழக்கு விசாரணை, ஹாரியானாவில் உள்ள தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது வந்தது. இறுதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பை மார்ச் 11 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்நிலையில் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட துறவி அசீமானந்த் உள்ளிட்ட நால்வரை விடுதலை செய்துநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

புதனன்று இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்.  அதில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தேசிய புலனாய்வு முகமை போலீசார்தவறிவிட்டதாக தெரிவித்த நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்ட துறவி அசீமனந்த், லோகேஷ் சர்மா, கமல் சவுகான் மற்றும் ராஜேந்தர் ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT