இந்தியா

ரஃபேல் விமானங்கள் வந்துவிட்டால் பாக். ராணுவம் எல்லையருகில் கூட வராது: விமானப்படைத் தளபதி

DIN

ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படைக்கு வந்துவிட்டால், பாகிஸ்தான் ராணுவம் எல்லையருகில் கூட வராது என விமானப்படைத் தளபதி பி.எஸ்.தனௌ திங்கள்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்திய விமானப்படைக்கு ரஃபேல் போர் விமானங்கள் வந்தடைந்துவிட்டால், இந்திய விமானப்படையின் சக்தி மேலும் அதிகரிக்கும். அப்போது எல்லைக்கு அருகில் கூட பாகிஸ்தான் ராணுவம் வராது. ஏனென்றால் ரஃபேல் போர் விமானம் போன்ற அதீத சக்தி கொண்டதை எதிர்க்கும் அளவுக்கான திறன் பாகிஸ்தானிடம் கிடையாது. 

வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் ரஃபேல் போர் விமானங்கள் கிடைத்துவிடும். நவீன போர் திறன் மேம்பாட்டில் அவ்வகை போர் விமானங்கள் சிறந்த உருவாக்கங்கள் ஆகும்.

அதேபோன்று புதிதாக இணைக்கப்பட்டுள்ள சினூக் வகை ஹெலிகாப்டர்களால், மிக உயரமான பகுதிகளுக்கும் அதிக எடை மற்றும் வீரர்களை கொண்டு செல்ல முடியும். இந்திய விமானப்படைக்கு இது ஒரு சிறந்த மைல்கல் தருணம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT