இந்தியா

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு: இடைத்தரகர் சுஷேன் குப்தாவுக்கு 4 நாள் அமலாக்கத்துறை காவல்

DIN


விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகராக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சுஷேன் குப்தாவை 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலுக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் ராஜிவ் சக்ஸேனா அரசுத் தரப்பு சாட்சியாக மாறுவதாக தெரிவித்தார். இதையடுத்து, அவர் அளித்த தகவலின்படி இந்த வழக்கில் சுஷேன் மோகன் குப்தா நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் இன்று (செவ்வாய்கிழமை) தில்லி சிறப்பு நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டார். 

அப்போது, அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியது. இதையடுத்து, 4 நாட்களுக்கு மட்டும் அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா கள நிலவரத்தை வெளிக்காட்டிய ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT