இந்தியா

ஆம்ஆத்மி கூட்டணி குறித்து ராகுல் இறுதி முடிவெடுப்பார்: தில்லி காங்கிரஸ்

மக்களவைத் தேர்தலில் ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைப்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் முடிவெடுப்பார் என தில்லி காங்கிரஸ் செவ்வாய்கிழமை தெரிவித்தது. 

DIN

மக்களவைத் தேர்தலில் ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைப்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் முடிவெடுப்பார் என தில்லி காங்கிரஸ் செவ்வாய்கிழமை தெரிவித்தது. ஆம்ஆத்மி உடன் கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் தில்லி காங்கிரஸில் தொடர்ந்து உள்கட்சிப்பூசல் நடந்து வருகிறது. 

இந்நிலையில், ஆம்ஆத்மி உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அடுத்த சில நாட்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் இந்த முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித், ஆம்ஆத்மி கூட்டணிக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ராகுல் மற்றும் ஆம்ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் ஆகியோரை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தனித்தனியாக சந்தித்துள்ளார். 

பாஜக-வை வீழ்த்தும் விதமாக வருகிற மக்களவைத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்று அப்போது ஷரத் பவார், ஆம்ஆத்மியிடம் வலியுறுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT