இந்தியா

காங்கிரஸ் ஆட்சியில் இரண்டு பேர் சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்: ப. சிதம்பரம்

DIN


காங்கிரஸ் ஆட்சியில் இரண்டு பேர் சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர், மசூத் அஸார் ஒன்றும் முதல் நபர் அல்ல என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸார் அண்மையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டதில் மசூத் அஸார் ஒன்றும் முதல் நபரல்ல என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

செய்தியாளர்களைச் சந்தித்த ப. சிதம்பரம், 

"மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கான நடைமுறை 2009-இல் தொடங்கப்பட்டது. அந்த நடைமுறை 10 ஆண்டுகள் கழித்து நிறைவடைந்துள்ளது. பிரதமர் மோடி கடைசி காட்சியை குறித்து மட்டுமே பேசுகிறார். இது படத்திற்கு போய்விட்டு கடைசி காட்சியை மட்டும் பார்ப்பது போல் உள்ளது. முந்தைய காட்சிகள் குறித்து கருத்து என்ன?

ஹபீஸ் சயீத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்படவைத்தது யார்? லக்வியை மறந்துவீட்டீர்களா? காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது இரண்டு பெயர்கள் சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டது. சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்படுவதில் மசூத் அஸார் ஒன்றும் முதல் நபர் அல்ல" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT