புது தில்லி: இந்தியாவில் இதுவரை நடைபெற்ற 4 கட்ட மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.
அதன்படி, முதல்கட்ட தேர்தலில் நாடு முழுவதும் 69.5% வாக்குகளும், 2ம் கட்ட தேர்தலில் 69.44% வாக்குகளும் பதிவாகின.
3ம் கட்ட தேர்தலில் 68.4% வாக்குகளும், 4வது கட்ட தேர்தலில் 65.1% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
அதோடு, 2ம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்ற தமிழகத்தில் 72.01%, புதுச்சேரியில் 81.19% வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.