இந்தியா

பொருளாதார தோல்விகளை மறைக்க பிரதமர் மோடி முயற்சி

நாட்டின் பொருளாதார விவகாரங்களில் தனது அரசு அடைந்த தோல்விகளை மறைக்கவே, புல்வாமா, பதான்கோட் ஆகிய சம்பவங்களை பிரதமர் நரேந்திர மோடி எழுப்புகிறார் என்று

DIN

நாட்டின் பொருளாதார விவகாரங்களில் தனது அரசு அடைந்த தோல்விகளை மறைக்கவே, புல்வாமா, பதான்கோட் ஆகிய சம்பவங்களை பிரதமர் நரேந்திர மோடி எழுப்புகிறார் என்று தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா குற்றம்சாட்டினார்.
 அனந்த்நாக் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட புல்வாமாவில் வெள்ளிக்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
 பாகிஸ்தானில் நடைபெறும் தேர்தல் பிரசாரங்களின்போது, ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவது முன்பு வாடிக்கையாக இருந்தது. ஆனால், இப்போதோ இந்தியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடி அதிகம் எழுப்பி வருகிறார். பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், விவசாயிகள் பிரச்னைகள் என அனைத்து நிலைகளிலும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தோல்வி கண்டுவிட்டது. அந்த தோல்விகளை மறைப்பதற்காக, புல்வாமா பயங்கரவாத தாக்குதல், அதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பதிலடி நடவடிக்கை ஆகியவற்றை எழுப்புகிறார் என்றார் ஒமர்.
 முன்னதாக, தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
 அனந்த்நாக் தொகுதியில், எங்களது கட்சி சார்பில் முன்னாள் நீதிபதி ஹஸ்னைன் மசூதி போட்டியிடுகிறார். இவரது தீர்ப்பால்தான், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவுக்கான சட்டப்பூர்வ அந்தஸ்து இன்னும் நீடித்து வருகிறது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை தக்க வைப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்துவோம். நாடாளுமன்றத்திலும் குரல் கொடுப்போம் என்றார் அவர்.
 பயங்கரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட அனந்த்நாக் மக்களவைத் தொகுதிக்கு, மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் இரு கட்ட தேர்தல்கள் ஏற்கெனவே நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில், மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு மே 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

திருப்பூர்: போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை கைது!

விஜய்யிடம் இதுபோல கேள்வி கேட்டிருக்கிறீர்களா? - உதயநிதி பேட்டி

SCROLL FOR NEXT