இந்தியா

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வில் 13 பேர் முதலிடம்

DIN


சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இந்த தேர்வில் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப், கேரளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 13 பேர், 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். 498 மதிப்பெண்கள் பெற்று 24 பேர் இரண்டாம் இடத்தையும், 497 மதிப்பெண்கள் பெற்று 58 பேர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். 
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகள், கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்கி மார்ச் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வுக்காக நாடு முழுவதும் சுமார் 6,000 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 
சுமார் 18 லட்சத்து 27 ஆயிரத்து 472 பேர் தேர்வு எழுதிய இந்த தேர்வில், 91.10 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 86.70 சதவீதமாக இருந்தது. அதை ஒப்பிடும்போது, இந்த முறை தேர்ச்சி விகிதம் 4. 40 % அதிகரித்துள்ளது. இந்த ஆண்டும், மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  57, 256 பேர், 95 சதவீதத்துக்கு அதிகமாகவும், 2. 25 லட்சம் பேர்,  90 சதவீதத்துக்கு அதிகமாகவும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
திருவனந்தபுரம் மண்டலம்,  99.85 % தேர்ச்சி விழுக்காட்டை பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. 
அதற்கு அடுத்த படியாக சென்னையில் 99 சதவீதமும், ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் 95. 89 சதவீத மாணவ, மாணவிகளும் தேர்ச்சியடைந்துள்ளனர்.
74. 49 சதவீத தேர்ச்சி விழுக்காட்டுடன் அஸ்ஸாம் மாநிலத்தின் குவாஹாட்டி கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. 
ஸ்மிருதி இரானி மகள் 82%: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் பத்தாம் வகுப்பு தேர்வில் 82 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். 
முன்னதாக, சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் அவரது மகன் 91% மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இந்நிலையில், தனது மகளும் பத்தாம் வகுப்பில் 82 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது மிகவும் பெருமையாக இருப்பதாக ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
கேந்திரீய வித்யாலயா பள்ளிகளில்  99. 47% தேர்ச்சி: மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திரீய வித்யாலயா பள்ளிகளில் பயின்ற 99. 47 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர்.
மற்றொரு மத்திய அரசு பள்ளியான ஜவாஹர் நவோதயா வித்யாலயா பள்ளி, 98. 57 சதவீத தேர்ச்சி விழுக்காட்டை பெற்றுள்ளது. தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் 94. 15% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் அதிக அளவில் தேர்ச்சி விகிதம் பெற்றதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT