இந்தியா

தமிழ் மாணவர்கள் விவகாரம்: மன்னிப்புக் கோரினார் கேஜரிவால்

DIN

தில்லி கல்லூரிகளில் தமிழ் மாணவர்களால், தில்லி மாணவர்களுக்கான இடம் பறிபோவதாக தெரிவித்த கருத்துக்காக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மன்னிப்புக் கோரினார். 
இதுதொடர்பாக செய்தி சேனல் ஒன்றுக்கு கேஜரிவால் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: 
தமிழ் மக்கள் மீதும், தமிழ் மாணவர்கள் மீதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். இந்த நாட்டின் வளர்ச்சியில் தமிழர்கள் ஆற்றிய பங்கை நான் பாராட்டுகிறேன்.
எந்தவொரு தமிழ் மாணவர்களுக்கும், தமிழர்களுக்கும் நான் எதிரானவன் அல்ல.  என்னுடைய மாநிலத்தில் 12 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 98 சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்குக் கூட தில்லி கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை. 
இதனால்தான் தில்லியில் 12-ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு 85 சதவீதம் இடங்களையும், மற்ற மாநில மாணவர்களுக்கு 15 சதவீதம் இடத்தையும் ஒதுக்க
விரும்பி அப்படிக் கூறினேன். ஆனால், மத்திய அரசின் உதவி பெறும் கல்லூரிகளில் தமிழ் மாணவர்கள் உள்பட அனைத்து மாநில மாணவர்களும் சேரலாம். 
தமிழ் மாணவர்கள் மெரிட் அடிப்படையில் வருகின்றனர். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். தில்லி மாணவர்கள் தொடர்பான வருத்தத்தை மட்டுமே பதிவு செய்தேன். தமிழ் மாணவர்கள் அதிகமாகச் சேருவதாக ஒரு கல்லூரியை உதாரணம் காட்டி நான் கூறியது தவறு. அதற்காக மன்னிப்புக் கோருகிறேன்.
குறிப்பிட்ட மாநிலத்தின் மாணவர்களை மையப்படுத்தி நான் அதைக் கூறியிருக்கக் கூடாது. நான் தவறு செய்து விட்டேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT