இந்தியா

கிரண்பேடி அதிகாரம் தொடர்பான மேல்முறையீடு: உத்தரவிற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

கிரண்பேடி அதிகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

DIN

புது தில்லி: கிரண்பேடி அதிகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மாநில காங்கிரஸ் எம்எல்ஏ கே.லட்சுமிநாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்தார். 

அந்த வழக்கில் துணை நிலை ஆளுநரின் கூடுகள் அதிகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து துணைநிலை ஆளுநர் கிரண் பேடி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான கே. லட்சுமிநாராயணன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT