இந்தியா

மோடியை நீக்க விரும்பினார் வாஜ்பாயி; அதை தடுத்தது யார் தெரியுமா? யஷ்வந்த் சின்ஹா பரபரப்பு தகவல்

PTI


போபால்: குஜராத் மாநிலம் கோத்ரா வன்முறையின் போது பாஜகவில் இருந்தே மோடியை நீக்க வேண்டும் என்று அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி விரும்பியதாக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

போபாலில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா பல கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அவர் இது குறித்துப் பேசுகையில், 2002ஆம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களால்  வேதனை அடைந்த அடல் பிஹாரி வாஜ்பாயி, மாநில முதல்வர் நரேந்திர மோடியை பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைக்க விரும்பினார். இது குறித்து 2002ம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற தேசிய செயற்குழுக் கூட்டத்தின் போது, அடல் பிஹாரி வாஜ்பாயி தனது மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசினார். மோடி முதல்வர் பதவியில் இருந்து விலக மறுப்பு தெரிவித்தால், குஜராத்தில் ஆட்சியையே கலைத்து விடுவது என்று முடிவெடுத்திருப்பதாகக் கூறினார்.

ஆனால், இந்த முடிவுக்கு அத்வானி ஒப்புக் கொள்ளவில்லை. ஒருவேளை, முதல்வர் பதவியில் இருந்து மோடியை நீக்கினால், தான் (அத்வானி) மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக வாஜ்பாயிக்கு நெருக்குதல் கொடுத்தார். அத்வானியின் இந்த நிலைப்பாட்டினால், வாஜ்பாயி தனது முடிவில் இருந்து பின்வாங்கினார் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT