இந்தியா

நமோ டிவியில் தேர்தல் நடத்தை விதிமீறல்: தில்லி பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்?

DIN


தில்லியில் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த பிறகும் நமோ டிவியில் தேர்தல் தொடர்பான நிகழ்வுகளை ஒளிபரப்புவதாக தில்லி பாஜகவுக்கு தில்லி தலைமைத் தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 1.43 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இதன்மூலம், தில்லியில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. இதன்மூலம், ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை தேர்தல் பிரசார தடை காலம் அங்கு அமலில் உள்ளது. 

இந்த நிலையில், தில்லியில் தேர்தல் பிரசார தடை காலத்திலும் நமோ டிவியில் தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டதாக தெரிகிறது. இதனால், தில்லி பாஜகவுக்கு தில்லி தலைமைத் தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நோட்டீஸுக்கு தில்லி பாஜக சனிக்கிழமை மாலைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT