யானை குட்டி ஒன்று எதிர்பாராத விதமாக ஏரியில் சிக்கிக்கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அஸ்ஸாம் மாநிலத்தின் குவாஹட்டி நகரில் உள்ள தீபோர் பீல் எனுமிடத்தில் அமைந்துள்ள ஏரியில் யானை குட்டி ஒன்று சிக்கித் தவித்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்த வனத்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நீண்ட நேர போராட்டத்துக்குப் பின் அந்த யானை குட்டியை பத்திரமாக மீட்டனர்.
தனது சுட்டித் தனத்தால் அங்கிருந்த ஏரியில் தெரியாமல் தவறி விழுந்து சிக்கிக் கொண்ட குட்டி யானை மீட்கப்பட்டதை அறிந்த அப்பகுதியினர் மகிழ்ச்சியடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.