இந்தியா

மேற்கு வங்கத்தில் அமித் ஷா ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுப்பு?

DIN

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, ஜாதவ்பூர் மற்றும் வடக்கு 24 பார்கன்ஸ் உள்ளிட்ட இடங்களில் திங்கள்கிழமை பிரசாரம் செய்கிறார்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்பூரில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமல்லாமல் அங்கு நடைபெறயிருந்த சாலை மார்கப் பிரசாரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பா சூழல் காணப்படுகிறது.

முன்னதாக, மேற்கு வங்கத்தில் நடைபெற்ற 6-ஆம் கட்ட வாக்குப்பதிவின் போது பாஜக வேட்பாளர்கள் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது பதற்றமான சூழலை ஏற்படுத்தியது. இதனால் அங்கு இவ்விரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான போக்கு காணப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT