இந்தியா

ஐசிஐசிஐ வங்கி - விடியோகான் கடன் மோசடி வழக்கு: அமலாக்கத் துறை முன் சந்தா கோச்சார், தீபக் கோச்சார் ஆஜர்

DIN


வங்கிக் கடன் மோசடி விவகாரம் தொடர்பாக, ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகிய இருவரும் தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆஜரானார்கள்.

சந்தா கோச்சார், ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தபோது, விதிகளை மீறி விடியோகான் நிறுவனத்துக்கு ரூ. 1,875 கோடி கடன் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதற்குப் பிரதிபலனாக, சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாருக்குச் சொந்தமான நூபவர் ரினீவபிள்ஸ் நிறுவனத்தில், விடியோகான் குழுமம் முதலீடு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சிபிஐ வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறது. அதனடிப்படையில், கருப்புப் பண மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக, கடந்த மார்ச் 1-ஆம் தேதி மும்பை மற்றும் ஔரங்காபாத்தில் சந்தா கோச்சார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் விடியோகான் குழுமத்தின் வேணுகோபால் தூத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.  

இதையடுத்து, கடந்த மார்ச் 2-ஆம் தேதி சந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சாரிடம் மும்பை அலுவலகத்தில் வைத்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. அதன்பிறகு, சில நாட்களுக்கு முன் இந்த வழக்கு தொடர்பாக தீபக் கோச்சாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. மேலும், தீபக் கோச்சாரின் சகோதரர் ராஜீவ் கோச்சாரும் அண்மையில் அமலாக்கத் துறையால் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.   

இந்த நிலையில், சந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சார் தில்லியில் இன்று அமலாக்கத் துறை முன்பு ஆஜராகினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

உலகளாவிய பெருமை பெற்றது திருக்குறள்: உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார்

தீவிர புயலாக வலுப்பெற்றது ரீமெல்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT