இந்தியா

மாயாவதியின் பேச்சை வைத்தே அவர் பொதுவாழ்வுக்கு தகுதியானவர் இல்லை என்று  அறியலாம்: அருண் ஜேட்லி

UNI


புது தில்லி: அரசியல் சுயலாபத்துக்காக தனது மனைவியையே கைவிட்டுவிட்டார் என்று பிரதமர் மோடியை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமரிசித்திருப்பதற்கு மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி பற்றி தனிப்பட்ட வகையில் விமரிசித்திருப்பதன் மூலம், மாயாவதி, அரசியல்வாழ்க்கைக்கு தகுதியானவர் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம் என்றும் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

டிவிட்டர் பக்கத்தில் இன்று தனது தொடர்ச்சியான டிவீட்டுகளால் எதிர்க்கட்சித் தலைவர்களை போட்டு வாட்டி வதக்கியிருக்கும் அருண் ஜேட்லி, தனது சொந்த மாநிலத்தில் ஜனநாயகத்தைக் கொன்று குவிக்கிறார் என்று மம்தா பானர்ஜியையும் காட்டமாக விமரிசித்துள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, தனது அரசியல் சுயலாபத்துக்காக தனது மனைவியையே கைவிட்டுவிட்ட நபர், எப்படி நாட்டில் உள்ள பெண்களை மதிப்பார் என்று எதிர்பார்க்க முடியும் என கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT