இந்தியா

இந்திய விமானங்களுக்கு தடையை நீக்க மே 30-இல் பாகிஸ்தான் பரிசீலனை

DIN


பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது குறித்து, வரும் 30-ஆம் தேதி பரிசீலிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதி கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி நிகழ்த்திய தற்கொலை தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர்.
இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தானின் பாலாகோட்டில் இருந்த ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை அடுத்து, பாகிஸ்தான் வான்பரப்பில் விமானங்கள் பறப்பதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இதேபோல், இந்தியாவும் தனது வான்பரப்பில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு தடை விதித்தது.  
பிறகு, இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளுக்கு விமானங்களை இயக்குவதற்கு பாகிஸ்தான் அரசு கடந்த மார்ச் 27-ஆம் தேதி அனுமதி அளித்தது. இந்திய அரசு விதித்த தடையின் காரணமாக, பாங்காக், கோலாலம்பூர் ஆகிய நகரங்களுக்கு பாகிஸ்தான் அரசால் விமானத்தை இயக்க முடியவில்லை. இந்நிலையில், இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், லாகூரில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை, வரும் 30-ஆம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரி ஒருவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்குவது குறித்து, வரும் 30-ஆம் தேதி பரிசீலிக்கப்படும் என்றார்.
இதுகுறித்து பாகிஸ்தான் அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஃபவத் செளதரி கடந்த சில தினங்களுக்கு முன் கூறுகையில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே, இந்திய விமானங்களை அனுமதிக்கும் விவகாரத்தில், இந்தியாவில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு ஆட்சியமைக்கும் வரை இதே நிலை நீடிக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT