இந்தியா

தேர்தல் ஆணையத்திடம் பாஜக மீது திரிணமூல் காங்கிரஸ் புகார்

DIN

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வன்முறையின்போது, சமூக சீர்திருத்தவாதி ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் சிலையை  பாஜகவினர் சேதப்படுத்தியது தொடர்பான ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.
தில்லியில் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓபிரையன் உள்ளிட்ட அக்கட்சித் தலைவர்கள் புதன்கிழமை சென்றனர். அப்போது தேர்தல் ஆணையத்திடம் வித்யாசாகரின் சிலையை பாஜகவினர் சேதப்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை  திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் அளித்தனர்.
முன்னதாக, தில்லியில் செய்தியாளர்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் பேட்டியளிக்கையில், வித்யாசாகரின் சிலையை பாஜகவினர் சேதப்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விடியோ பதிவை வெளியிட்டனர். மேலும், திரிணமூல் காங்கிரஸார் மற்றும் போலீஸாருடன் மோதலில் ஈடுபடும் வகையில், இரும்பு கம்பிகள், ஆயுதங்களுடன் பாஜகவினர் வர வேண்டும் என்று அக்கட்சித் தொண்டர் ஒருவர் அழைப்பு விடுக்கும் வகையிலான விடியோ பதிவையும் வெளியிட்டனர்.
இதுகுறித்து டெரிக் ஓபிரையன் கூறுகையில், பாஜகவினர் செய்த காரியத்தை மட்டுமல்லாமல், அமித் ஷா ஒரு பொய்யர், ஏமாற்று பேர்வழி என்பதையும் இந்த விடியோ வெளிப்படுத்துகிறது. கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற சம்பவத்தால், மேற்கு வங்காளத்தின் பெருமை பாதிக்கப்பட்டு விட்டது. கொல்கத்தா நகர வீதிகளே அதிர்ச்சி மற்றும் ஆத்திரத்தால் நிரம்பியிருந்தது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT