இந்தியா

ஹிந்துவாக இருப்பவர் பயங்கரவாதியாக இருக்க முடியாது: பிரதமர் நரேந்திர மோடி

DIN


ஹிந்துவாக இருப்பவர் பயங்கரவாதியாக இருக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
முன்னதாக, சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு ஹிந்து. அவர் நாதுராம் கோட்சே என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல் ஹாசன் பேசியிருந்தார். இந்நிலையில், அவருக்கு பதிலளிக்கும் வகையில் மோடி இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சி சேனலுக்கு புதன்கிழமை பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:
எனக்குத் தெரிந்தவரையில் எனது கலாசாரத்தில், ஹிந்துவாக இருப்பவர் யாரும் பயங்கரவாதியாக இருக்க முடியாது. ஒருவர் பயங்கரவாதியாக இருந்தால் அவர் நிச்சயமாக ஹிந்துவாகவும் இருக்க முடியாது என்றார்.
முன்னதாக, மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே திட்டமிட்டு ஹிந்து பயங்கரவாதம் என்ற கருத்தைப் பரப்பி வருகிறது. இதன் மூலம் ஹிந்து பாரம்பரியத்தின் மீது அவதூறை காங்கிரஸ் பரப்பி வருகிறது. இந்த பாவத்துக்கான தண்டனையில் இருந்து காங்கிரஸ் தப்ப முடியாது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT