இந்தியா

மம்தா மீது பாஜக வேண்டுமென்றே வெறுப்புணர்வை தூண்டுகிறது: மாயாவதி குற்றச்சாட்டு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது பாஜக வேண்டுமென்றே வெறுப்புணர்வை தூண்டுவதாக உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார். 

PTI

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது பாஜக வேண்டுமென்றே வெறுப்புணர்வை தூண்டுவதாக உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக லக்னோவில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மேலும் கூறியதாவது:

நடப்பு தேர்தல் ஆணையர் பாஜக-வுக்கு ஆதரவாக செயல்படுவது மேற்கு வங்க விவகாரம் மூலம் அம்பலமாகியுள்ளது. நாடு முழுவதிலும் தேர்தல் முறையாக நடைபெறவில்லை. மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவே மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் செயல்படாமல் உள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி தன்மீதான தவறுகளை மறைப்பதற்காகவே மேற்கு வங்கத்தில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களை கட்டவிழ்த்துள்ளார். மோடி கலந்துகொள்ளும் பிரசாரங்கள் இருப்பதாலேயே மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு இரவு வரை கெடு அளிக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் காலை முதலே பிரசாரங்களை முடக்கியிருக்க வாய்ப்புள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி மீது இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் மூலம் பாஜக வெறுப்புணர்வை தூண்டுகிறது என்று குற்றம்சாட்டினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT