இந்தியா

இறுதிக்கட்ட தோ்தல்: தோ்தல் ஆணையத்துக்கு திரிணமூல் கடிதம்

DIN


மேற்கு வங்கத்தில் மக்களவை இறுதிக்கட்டத் தோ்தல் அமைதியாகவும், பாரபட்சமின்றியும் நடைபெறுவதை உறுதிப்படுத்தும்படி, தோ்தல் ஆணையத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள 9 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தோ்தல் நடைபெறவிருக்கிறது. கடந்த 6 கட்டத் தோ்தல்களிலும், மேற்கு வங்க மாநிலத்தின் பரவலான பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. இதை கருத்தில் கொண்டு, மேற்கு வங்கத்தில் மக்களவை இறுதிக்கட்ட தோ்தல் அமைதியாகவும், பாரபட்சமின்றியும் நடைபெறுவதை உறுதிப்படுத்தும்படி தோ்தல் ஆணையத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி எழுதியுள்ள கடிதத்தில், 

‘இறுதிக்கட்ட தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த தோ்தல் அமைதியாகவும், பாரபட்சமின்றியும், மத்திய அரசு மற்றும் மத்தியில் ஆளும் பாஜகவின் தலையீடு இல்லாமல் நடைபெறுவதை தோ்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். நாட்டின் கூட்டாட்சி அமைப்பையும், ஜனநாயக நிறுவனங்களையும் தோ்தல் ஆணையம் பாதுகாக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், ‘தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய பாதுகாப்புப் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், தோ்தல் நோ்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவது தொடா்பான நம்பிக்கையை மக்களிடையே மத்திய பாதுகாப்புப் படைகள் ஏற்படுத்தவில்லை. சிஆா்பிஎஃப் படைப்பிரிவின் அணிவகுப்பும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இடங்களில் நடக்கவில்லை. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்’ எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT