இந்தியா

கேன்ஸ் விருது வென்ற இந்திய இயக்குநர்

DIN


கேன்ஸ்: பிரான்ஸில் நடைபெறும் 72-ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய இயக்குநர் அச்சுதானந்த துவிவேதி விருது வென்றார்.

"சீட் மதர்' என்ற அவரது 3 நிமிட படத்துக்காக அவர் மூன்றாவது பரிசு பெற்றார்.
"நெஸ்பிரúஸா டேலன்ட்ஸ்' பிரிவில் இந்த விருதுக்கு அச்சுதானந்த துவிவேதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உணவுத் தொடர்பான கருவை அடிப்படையாக வைத்து இந்த 3 நிமிட குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

பல்லுயிர் பெருக்கம், விவசாயம், உணவு பாரம்பரியம், பல்வேறு கலாசாரங்களில் பிரபலமான உணவுகள் என பல்வேறு கருக்களை அடிப்படையாக வைத்து 47 நாடுகளில் இருந்து 371 சில நிமிட விடியோக்கள் கேன்ஸ் விழாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

"சீட் மதர்' படத்தின் கரு, மகாராஷ்டிரத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஒரு பெண்  பாரம்பரிய முறையில் விவசாயம் செய்வதை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இதே பிரிவில் போட்டியிட்ட "சுபாக்' என்ற குறும்படத்துக்காக நியூஸிலாந்து இயக்குநர் ஜோஷ் மோரிஸ் முதல் பரிசை தட்டிச் சென்றார். இரண்டாவது பரிசை மெக்ஸிகோவைச் சேர்ந்த இயக்குநர் பெற்றார்.

இதற்கு முன்பு, கடந்த 2016-ஆம் ஆண்டு 90 விநாடிகள் கொண்ட ஆவணப்படத்துக்காக கேன்ஸ் லயன்ஸ் விழாவில் அச்சுதானந்த துவிவேதி பரிசு வென்றிருக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT