இந்தியா

 தலை ஒட்டிப் பிறந்திருந்தாலும் தனித்தனியாக வாக்குச் செலுத்திய சகோதரிகள்: பிகார் வினோதம் 

தலை ஒட்டிப் பிறந்திருந்தாலும் சகோதரிகள் இருவர் தனித்தனியாக வாக்குச் செலுத்திய சம்பவம் பிகாரில் நிகழ்ந்துள்ளது.

DIN

பாட்னா: தலை ஒட்டிப் பிறந்திருந்தாலும் சகோதரிகள் இருவர் தனித்தனியாக வாக்குச் செலுத்திய சம்பவம் பிகாரில் நிகழ்ந்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 7-ஆவது மற்றும் இறுதி கட்டத் தேர்தல், ஞாயிறு காலை தொடங்கியது. 8 மாநிலங்களில் மீதமுள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிகாரில் உள்ள 8 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஞாயிறன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில் தலை ஒட்டிப் பிறந்திருந்தாலும் சகோதரிகள் இருவர் தனித்தனியாக வாக்குச் செலுத்திய சம்பவம் பிகாரில் நிகழ்ந்துள்ளது.

பிகாரில் உள்ள இரட்டை சகோதரிகள் ஸபா மற்றும் பாரா. தலை ஒட்டி பிறந்த 'கன்ஜாய்ண்ட் ட்வின்ஸ்' வகையினைச் சேர்ந்த இவர்கள் இருவரும், தற்போது 18 வயதினை நிறைவு செய்து விட்டனர். அதனால் அவர்களுக்கு தனித்தனியாக வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

அதையடுத்து ஞாயிறு நடைபெறும் தேர்தலில் இவர்கள் இருவரும் தங்களது ஜனநாயக கடமையினை தனித்தனையாக நிறைவேற்றினர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT