இந்தியா

ஏழாவது கட்டத் தேர்தலில் வாக்களித்தார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் 

நாடு முழுவதும் ஞாயிறன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஏழாவது கட்டத் தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வாக்களித்தார்.

DIN

சண்டிகர்: நாடு முழுவதும் ஞாயிறன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஏழாவது கட்டத் தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வாக்களித்தார்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 7-ஆவது மற்றும் இறுதி கட்டத் தேர்தல், ஞாயிறு காலை தொடங்கியது. 8 மாநிலங்களில் மீதமுள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

இந்நிலையில் ஏழாவது கட்டத் தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வாக்களித்தார்.

ஹர்பஜனின் சொந்த மாநிலமான பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளுக்கும் ஞாயிறன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், ஜலந்தரில் உள்ள கார்கி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற ஹர்பஜன் சிங், அங்கு வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

பஞ்சாபில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையில் மும்முனைப் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

400 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்

சிறுநீரக திருட்டு: பிணை கோரிய இடைத்தரகரின் மனு தள்ளுபடி

தொழில் முதலீடு உண்மை நிலை: பாக ஆவண தொகுப்பு வெளியீடு

கோயில் உண்டியல் பணத்தை திருட முயன்ற ஒருவா் கைது

தேசிய தீா்ப்பாயங்கள் ஆணையம்:4 மாதங்களில் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT