இந்தியா

கோடை காலத்தில் தேர்தலை நடத்த பாஸ்வான் எதிர்ப்பு

DIN

கோடை வெயில் கொளுத்தும் ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல்களை நடத்தக் கூடாது. நவம்பர் அல்லது பிப்ரவரி மாதத்தில் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம், வாக்கின் முக்கியத்துவத்தை மக்கள் இப்போது அதிக அளவில் உணர்ந்துள்ளனர். எனவே, வெயில் கொளுத்தும் ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தலை நடத்துவது சரியல்ல. ஏனெனில், அப்போது கோடை வெயில் உச்சத்தில் இருக்கும், வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருப்பதற்கு மிகுந்த சிரமப்படுவார்கள். புதிய அரசு அமைந்த பிறகு, அனைத்துக் கட்சித் தலைவர்களும் அமர்ந்து பேசி இது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும். பிப்ரவரி அல்லது நவம்பர் மாதத்தில் தேர்தலை நடத்தினால், வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரிக்கலாம். தேர்தல் வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரிப்பது ஜனநாயகத்தை வலுப்படுத்தும். எனவே, இதனை ஜனநாயகத்தை மேம்படுத்தும் முயற்சியாக நாம் மேற்கொள்ளவது அவசியம் என்று கூறியுள்ளார். 
முன்னதாக, பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாரும் இதே கருத்தை வலியுறுத்தினார். 
அதிகபட்சம் மூன்று கட்டங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT