இந்தியா

வாக்களித்தவர்களுக்கு உணவகத்தில் தள்ளுபடி!

DIN

வாக்களித்ததற்கான அடையாளமாக விரலில் மை வைத்திருந்ததை காண்பித்தவர்களுக்கு, பிகார் மாநிலம், பாட்னாவில் உள்ள உணவகம் விலையில் தள்ளுபடி செய்தது.
பிரேஸர் சாலையில் உள்ள அந்த உணவகம், 17 சதவீத தள்ளுபடி வழங்கியது.
இதுகுறித்து அந்த உணவகத்தின் ஊழியர் ஒருவர் கூறுகையில், "வாக்களிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடைசி கட்ட தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு அன்றைய தினம்  தள்ளுபடி வழங்க முடிவு செய்தோம்.
கடந்த 8 ஆண்டுகளாக இந்த உணவகம் உள்ளது. ஆனால், இப்போதுதான் முதல்முறையாக தள்ளுபடி தருகிறோம். பல உணவுகள் தள்ளுபடி விலையில் ஞாயிற்றுக்கிழமை விற்பனை செய்யப்பட்டன. தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரும் 23ஆம் தேதி மிகப் பெரிய தள்ளுபடி வழங்கப்படும்' என்றார்.
பாட்னா மாவட்டத்தில் உள்ள பாட்னா சாஹிப், பாடலிபுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது.
பாட்னா சாஹிப் தொகுதியில் சத்ருகன் சின்ஹாவும் (காங்கிரஸ்), அவரை எதிர்த்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தும் (பாஜக) களத்தில் 
உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT