இந்தியா

வாக்குக் கணிப்புகள் சரியானவை அல்ல: வெங்கய்ய நாயுடு 

DIN

வாக்கு கணிப்பு முடிவுகள் சரியானவை அல்ல என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
மக்களவைத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்ததும், பல்வேறு தொலைக்காட்சிகளும், அமைப்புகளும் தேர்தலுக்குப் பிந்தைய வாக்கு கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. இந்நிலையில்,
ஆந்திர மாநிலம், குண்டூரில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற வெங்கய்ய நாயுடு, வாக்கு கணிப்பு முடிவுகள் குறித்து கூறியதாவது:
வாக்கு கணிப்பு முடிவுகள், தேர்தலின் சரியான முடிவுகள் அல்ல. முதலில் நாம் அதைப் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த 1999-ஆம் ஆண்டில் இருந்து பெரும்பாலான வாக்கு கணிப்புகள் தவறாகவே இருந்துள்ளன.
ஜனநாயகம் வலுப்பட வேண்டுமெனில், மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமெனில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து கடமைகளை நிறைவேற்ற வேண்டும். அண்மைக் காலமாக, அரசியல் நாகரிகம் குறைந்து வருவது கவலையளிக்கிறது. அரசியல் தலைவர்களின் பேச்சுகளில் பண்பாடு சிதைந்துள்ளது. ஒருவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார்கள். அரசியலில் ஒருவருக்கொருவர் எதிரி அல்ல; எதிர்ப்பாளர் மட்டுமே. இந்த அடிப்படை உண்மையைக் கூட அவர்கள் மறந்து விட்டனர்.
இதேபோல், நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் செயல்பாடுகளும், சட்டப்பேரவைகளில் எம்எல்ஏக்களின் செயல்பாடுகளும் கவலை அளிக்கிறது. அவர்கள், தாங்கள் சார்ந்துள்ள கட்சிக்கு மதிப்பளிக்கும் வகையில் நடந்துகொள்வதில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT