இந்தியா

அஸ்ஸாம் பாதுகாப்பு நிலைமை: ராஜ்நாத் சிங் தலைமையில் ஆய்வு

DIN

அஸ்ஸாம் மாநிலத்தின் பாதுகாப்பு நிலைமை குறித்து திங்கள்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவால், உள்துறை அமைச்சகத்தின் உயரதிகாரிகள், மாநில அரசின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநிலத்தில் தடை செய்யப்பட்ட உல்ஃபா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நிகழ்த்திய கையெறி குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்; 7 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், பாதுகாப்பு நிலைமை குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்ததாக, உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு சர்வானந்த சோனோவால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான (என்ஆர்சி) இறுதிப்பட்டியல் வெளியான பிறகு எழும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை எதிர்கொள்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதில் அரசு உறுதிபூண்டுள்ளது. உண்மையான குடிமக்கள், என்ஆர்சி பதிவேடு குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
அஸ்ஸாமில் வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாகக் குடியேறியவர்களை அடையாளம் காண்பதற்கும்,  உண்மையான குடிமக்களை கண்டறிவதற்காகவும், கடந்த 1951-இல் இருந்து அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு பராமரிக்கப்படுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அந்தப் பதிவேட்டை புதுப்பிப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பதிவேட்டின் வரைவு பட்டியல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அதில், 40.7 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டிருந்ததால், மாநிலமே கொந்தளித்தது. இதையடுத்து, விடுபட்டவர்களை சேர்க்கும் பணியை மாநில அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், என்ஆர்சி பதிவேட்டின் இறுதிப் பட்டியல், வரும் ஜூலை 31-ஆம் தேதி வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது. 
அந்தப் பட்டியல் வெளியான பிறகு, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதால், அதை எதிர்கொள்வது குறித்து ராஜ்நாத் சிங்குடன் உடனான சந்திப்பின்போது சர்வானந்த சோனோவால் ஆலோசனை நடத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

SCROLL FOR NEXT