முகப்பு
இந்தியா

அனைவரையும் நேசிக்க எனது தந்தை தான் கற்றுக்கொடுத்தார்: ராகுல் உருக்கம்

மறைந்த பிரதமர் ராஜீவ் 28-வது ஆண்டு நினைவு தினம் செவ்வாய்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:57 AM
பகிர்:

மறைந்த பிரதமர் ராஜீவ் 28-வது ஆண்டு நினைவு தினம் செவ்வாய்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா, காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் உத்தரப் பிரதேச (கிழக்கு) காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வதேரா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். 

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தனது தந்தை ராஜீவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல், ட்விட்டரில் புகழாரம் சூட்டினார். அதில் அவர் பதிவிட்டதாவது:

எனது தந்தை மிகவும் மென்மையானவர், அன்பானவர், பாசமானவர். அனைத்தையும் நேசிக்கவும், அனைத்திற்கும் மரியாதை அளிக்கவும் எனக்கு கற்றுக்கொடுத்தவர். யார் மீதும் வெறுப்பை காட்டாமல், அனைவரையும் மன்னிக்க கற்றுக்கொடுத்தவர். அவரை நான் மிகவும் இழக்கிறேன் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →