இந்தியா

மக்களவையில் அதிகரித்த முஸ்லிம் எம்.பி.க்கள்!

மக்களவையில் முஸ்லிம் எம்.பி.க்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.

DIN

மக்களவையில் முஸ்லிம் எம்.பி.க்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. 

நாட்டு மக்கள் தொகையில் முஸ்லிம் மக்கள் சுமார் 20 சதவீதம் பேர் உள்ளனர். 2004 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் முறையே 30 மற்றும் 34 முஸ்லிம் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். 

ஆனால், கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலின்போது, இந்த எண்ணிக்கை 23-ஆக குறைந்தது. 

இந்நிலையில், இந்த முறை மீண்டும் முஸ்லிம் எம்.பி.க்களின் பிரதிநிதித்துவம் மக்களவையில் மீண்டும் அதிகரித்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் 27 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 

முஸ்லிம் மக்கள் அதிகம் உள்ள உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து தலா 6 முஸ்லிம் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கேரளம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் தலா 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

1952-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட முதல் மக்களவையில் வெறும் 11 முஸ்லிம் எம்.பி.க்களே இருந்தனர். மக்களவையில் கடந்த 1980-ஆம் ஆண்டு அதிகபட்சமாக 49 முஸ்லிம் எம்.பி.க்கள் அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT