இந்தியா

ராகுல் ராஜிநாமா விவகாரத்தில் வதந்திகளை நம்பாதீர்: ரன்தீப் சிங் சுர்ஜிவாலா

இந்தக் கூட்டத்தில் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலக முடிவெடுத்து ராஜிநாமா கடிதத்தை அளித்ததாக செய்திகள் வெளியாகின. 

DIN

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியாயின. இதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 90 இடங்களில் வெற்றி பெற்றது.

அதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 52 இடங்களிலும் வெற்றி பெற்றாலும், பல இடங்களில் நோட்டாவை விட குறைவான வாக்குகளையே அக்கட்சி பெற்றது.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலக முடிவெடுத்து ராஜிநாமா கடிதத்தை அளித்ததாக செய்திகள் வெளியாகின. மேலும் ராகுலின் இந்த முடிவை மூத்த தலைவர்கள் மறுத்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் ராஜிநாமா செய்வதாக வந்த செய்திகள் வெறும் வதந்தி, அதை யாரும் நம்ப வேண்டாம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT