இந்தியா

சூரத் தீ விபத்தில் 20 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம்: 2 பேர் கைது

DIN

குஜராத்தில் வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சூரத் நகரில் சர்தானா பகுதியில் உள்ள 4 மாடி வணிக வளாகத்தில் தனியார் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்த வணிக வளாகத்தில் வெள்ளிக்கிழமை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. புகை மூட்டம் சூழ்ந்ததால், பயிற்சி மையத்தில் இருந்த மாணவர்கள், உயிர் பிழைப்பதற்காக, ஜன்னல்கள் வழியாக மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்தனர். 

தகவல் அறிந்து 19 தீயணைப்பு வண்டிகள், 2 மீட்பு ஏணி வாகனங்கள் ஆகியவற்றுடன் வந்த தீயணைப்புப் படையினர், மாடியில் சிக்கிக் கொண்டிருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரவும் போராடினர். இந்த விபத்தில் மாடியில் இருந்து குதித்து பலத்த காயமடைந்ததாலும், புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாலும் 20 மாணவர்கள் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் 20 வயதுக்கும் உள்பட்டவர்கள். 

சில மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ முழுமையாகக் கட்டுக் கொண்டு வரப்பட்டது. கட்டடத்தில் சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கட்டட உரிமையாளர் மற்றும் பயிற்சி வகுப்பு உரிமையாளரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT