இந்தியா

ஜூன் மாதத்தில் 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர்?

DIN


17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 6 முதல் ஜூன் 15 வரை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

17-வது மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம், நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்கவுள்ளார். 

நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு வரும் 31-ஆம் தேதி புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுதொடர்பாக, நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்ததாவது, 

நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 6 தொடங்கி 15-இல் நிறைவடைகிறது. இந்தக் கூட்டத்தொடரின் போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி தங்களது பெரும்பான்மையை நிரூபிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை

தட்டுப்பாடின்றி குடிநீா் தேவை: ஆணையரிடம் அதிமுக மனு

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

SCROLL FOR NEXT